இலங்கையில் குழந்தைக்கு பியர் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய இளைஞன்!

0

இலங்கையில் குழந்தை ஒன்று பியர் ரின்னில் இருந்து பியர் அருந்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து 25 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

பரவிய காணொளி காட்சிகள் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும் சந்தேக நபரை பேலியகொட பொலிசார் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.

பேலியகொட நுகே வீதியில் இடம்பெற்ற இச்சம்பவத் தில் 4 வயது குழந்தைக்கு பியர் ரின்னிலிருந்து பியரை அருந்த அனுமதித்தமைக்காக அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நாட்டின் தற்போதைய சட்டவிதிகளின் படி ஒருவர் 18 வயதுக்குக் குறைந்த ஒருவருக்கு உற்சாக பானம் அல்லது புகையிலை சார்ந்த பொருட்களை வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டால் இலங்கை சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும் என பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here