இலங்கையில் குழந்தைகள் பிறந்தவுடனேயே, தேசிய அடையாளஅட்டை?

0

குழந்தைகள் பிறந்த தருணத்திலேயே, அவர்களுக்கான தேசிய அடையாளஅட்டை இலக்கத்தை வழங்குவது கட்டாயம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

சிறுவர் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக இந்த யோசனையை முன்வைப்பதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகளுக்காக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப குழுக் கூட்டத்தின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் போது, அவர்களுக்கான தேசிய அடையாளஅட்டை இல்லாமை குறித்து, தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தைகள் பிறப்பிக்கின்ற தருணத்திலேயே, அவர்களுக்கான தேசிய அடையாளஅட்டையை வழங்குவது குறித்து குடும்ப நல சுகாதார அலுவலகத்தினால் இதற்கு முன்னரும் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த விடயம் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு குழந்தைகளுக்கு தேசிய அடையாளஅட்டை இலக்கத்தை பெற்றுக்கொடுப்பதன் நன்மைகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here