இலங்கையில் குழந்தைகளை அச்சுறுத்தும் ஆபத்தான புதிய நோய்

0

இலங்கையில் கொரோனா தொற்றுடன் தொடர்புடைய ஆபத்தான நோய் சிறுவர்கள் மத்தியில் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொரளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துன்னார்.

இதுவரை கொழும்பை சுற்றியுள்ள பிரதேசங்களை சேர்ந்த 6 சிறுவர்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களுக்கு கொரோனா தொற்றி 14 நாட்களின் பின்னரே இந்த பிரச்சினை ஏற்படுகின்றது.

விசேடமாக 5- 15 வயதிற்குட்பட்டவர்களுக்கே இந்த நிலைமை ஏற்படுகின்றது.

இதனை பல உறுப்பு நோய்த்தொற்று என அழைக்கப்படுகின்றது.

வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி, கண் சிவத்தல், உதடு மற்றும் நாக்கு சிவத்தல், உடல் வலிகள் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றது.

இதயத்தை பாதித்து இரத்த அழுத்தத்தை குறைத்து பிள்ளைகள் உயிரிழக்கும் நிலை ஏற்படும்.

இந்த நோய் நிலைமை 2020ஆம் திகதி பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற இந்த நோய் ஏற்பட்டு பிள்ளைகள் உயிரிக்கின்றனர்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட இலங்கை சிறுவர்கள் தீவர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் அவர்களை வெளியே கொண்டு செல்ல வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here