இலங்கையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை

0
High angle view of cute newborn baby boy sleeping in hospital bassinet

இலங்கையில் சத்திர சிகிச்சைகளுக்கான உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளது.

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் பிரிவுக்கு அவசர சத்திரசிகிச்சை பொருட்கள் தேவைப்படுவதால் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் விரைவாக சத்திர சிகிச்சைக்கான பொருட்கள் தீர்ந்து வருவதாக எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதனால் அறுவை சிகிச்சை பொருட்களை சிக்கனமாக பயன்படுத்தி வரையறுக்கப்பட்ட பொருட்களின் பாவிப்பு திறனை நீட்டிக்க நிபுணர்கள் முயற்சித்து வருகின்றனர்.

தமது கையிருப்பு முடிந்த பின்னர், தம்மால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது எனவும், வளரும் குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சைகளை தள்ளிப் போட முடியாது எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here