இலங்கையில் குறைக்கப்பட்ட சமையல் எரிவாயு விலைகள்

0

இலங்கையில் இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 246 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,664 ரூபாவாகும்.

அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 99 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,872 ரூபாவாகும்.

இதேவேளை, 2.3 கிலோ கிராம்​ எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 859 ரூபாவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here