இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான தகவல்

0

இலங்கையில் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு உத்தேச வீட்டுப் பொருளாதாரப் பாதுகாப்பு (நிவாரணப் பொதி) திட்டத்தின் கீழ் 2000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதியை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட 40 குடும்பங்கள் நிவாரணப் பொதிக்கு உரித்துடையவர்களாவர்.

மேலும், 115,867 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை மானிய விலையில் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், நிவாரணப் பொதிக்கு தகுதி பெறும் குடும்பங்களுக்கு டிஜிட்டல் அட்டை வழங்கப்படும். சிறப்பு அங்காடிகளில் கழிவு முறையில் பொருட்களைப் பெற இதைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here