இலங்கையில் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் கொடூரச் செயல்

0
Man on the chair in Handcuffs. Rear view and Closeup ,Men criminal in handcuffs arrested for crimes. With hands in back,boy prison shackle in the jail violence concept.

இலங்கையில் பொல்கஹவெல- உடபொல பகுதியில் 8 வயது சிறுவனை கிராம உத்தியோகத்தர் ஒருவர் கால்வாயில் வீசியுள்ளார்.

குறித்த உடபொல கிராம உத்தியோகத்தரை காவல்துறையைினர் கைது செய்துள்ளனர்.

கால்வாயில் யானை ஒன்று குளிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த, 8 வயது சிறுவனை தூக்கி கால்வாய்க்குள் வீசி காயப்படுத்தியதாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சந்தேகநபரின் நடவடிக்கையினால் குழந்தை எலும்பு முறிந்த நிலையில் மருத்துவதனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின்போது, 54 வயதான சந்தேக நபர் மதுபோதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here