இலங்கையில் கால்வாசி மதுபான போத்தல்களுக்கு தடை?

0

இலங்கையில் கால்வாசி மதுபான போத்தல்கள் தயாரிப்பதை தடை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புகையிலை மற்றும் மது ஒழிப்பு ஆணையம் நடத்திய ஆய்வில் கலந்து கொண்ட 72 சதவீதமானோர் கால்வாசி மதுபான போத்தல்களை தடை செய்ய வேண்டும் எனக் கருத்துகூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

17-30 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 40 சதவீதமானோரும், 31-45 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 35 சதவீதமானோரும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25 சதவீதமானோரும் கலந்து கொண்ட இந்த ஆய்வில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here