இலங்கையில் கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்களை அச்சுறுத்தும் கொவிட் -19

0

இலங்கையில் கொவிட் -19 இன் 3 ஆவது அலையினால் 60 கர்ப்பிணித் தாய்மார்களும், 18 வயதுக்குட்பட்ட 89 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தாய் மற்றும் சிறுவர் சுகாதார பணிப்பாளரான வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்களும் பூஸ்டர் டோஸை எடுத்துக்கொள்ளலாம் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here