இலங்கையில் கருப்பு பூஞ்சை தொற்று பரவுமா…?

0

இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று மக்களிடையே அதிகம் பரவி வருகின்றது.

இத்தொற்றானது இலங்கையில் பரவினால், நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சேமித்து வைப்பதன் மூலம் நம் நாடு தயாராக வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்தச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பேஜ், அம்பாறை பகுதியில் இந்திய ‘கருப்பு பூஞ்சை’ தொற்று பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அம்பாறை மாவட்டத்தில் பல ஆலோசகர்களுடன் தான் கலந்துரையாடியதாகவும் எனினும் அம்பாறையில் கருப்பு பூஞ்சை பரவுவதை உறுதிப்படுத்த எந்த சம்பவங்களும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்நோய் பரவினால் அதை எதிர்த்துப் போராட நாம் தயாராக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நமது அண்டை இந்தியாவில் இந்த நோய் பரவி வரும் நிலையில், பூஞ்சை தொற்று இலங்கையிலும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கொலம்பேஜ் கூறினார்.

அந்த பூஞ்சை தொற்றுக்கு எதிராக பயன்படுத்த ‘ஆம்போடெரிசின் பி’ போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளன என்றும் ஆனால் நம் நாட்டில் அந்த மருந்துகளின் அளவு போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டார்.

எனவே, இதுபோன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இறக்குமதி செய்து அவற்றை எதிர்கால பயன்பாட்டிற்காக சேமிக்க வேண்டும் என்று கொலம்பேஜ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here