இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை வெள்ளை நிற கழுகு

0

புத்தளம் பாலாவி 2ம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைக்க பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று (12) காலை மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போதே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அரிய வகை வெள்ளை நிற கழுகு (WHITE BELLIED SEA EAGLE ) HALIEETUS LEUCOGWTER இனத்தைச் சார்ந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அரிய வகை வெள்ளை நிற கழுகு விற்பனை செய்வதற்காக வளர்க்கப்பட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட உள்ளார்.

மேலும் அரிய வகை வெள்ளை நிற கழுகும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கபடவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here