இலங்கையில் கட்டுப்பாட்டு தளர்வு தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்

0

இலங்கையில் நடமாட்ட கட்டுப்பாட்டு தளர்வு தொடர்பில் பொதுமக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேல் மாகாணத்துக்குள் கட்டுப்பாடுகளை மீறுகின்ற வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்கும் பணிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இந்த கோரிக்கையை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்திடம் விடுத்துள்ளார்.

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடுகள் இன்று 25 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளன.

இலங்கையை பொருத்தமட்டில் கொரோனா வைரஸ் பரவல் முற்றாக கட்டுப்பாடுத்தப்படவில்லை.

குறிப்பாக மேல் மாகாணத்தை சேர்ந்த மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பொது இடங்களில் நடமாட வேண்டும்.

இயன்ற வரை பொது இடங்களில் நடமாடுவதை தவிர்த்து கொள்வதே சிறந்த தீர்வாகும்.

தங்களது உயிரையும் குடும்பத்தினரையும் பாதுகாக்க வேண்டுமாயின் உரிய சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

அதேவேளை இன்று முதல் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டாலும் சன நெரிசலை கட்டுப்படுத்த வர்த்தகர்கள் உரிய நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

அதேவேளை மாகாணங்களுக்கிடையே அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here