இலங்கையில் கட்டுப்பாடுகளுடன் மத வழிபாட்டுத்தளங்களை திறக்க அனுமதி!

0

ஆலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தளங்களில் ஒன்றுகூடக்கூடிய உச்ச எண்ணிக்கை ஐம்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தளங்களில் ஈடுபடுவது தொடர்பில் சுகாதார அமைச்சு வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இந்த பணிப்புரைகளை வெளியிட்டுள்ளார்.

வழிபாட்டுத் தளங்களில் சமூக இடைவெளி குறைந்தபட்சம் ஒரு மீற்றர் அளவில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசனங்களுக்கு இடையிலும் ஒரு மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கைகளை கழுவுவதற்கு தேவையான சவர்க்காரம், நீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டுமென மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here