இலங்கையில் கட்டுப்பாடுகள் தளர்த்துவது தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்

0

இலங்கையில் எதிர்வரும் 31ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் கொரோனா தொற்றின் நிலைமைகளை அவதானித்து இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கடந்த 25ஆம் திகதி முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்யும் நோக்கில் 31ஆம் திகதி மற்றும் 4ஆம் திகதிகளில் இந்தப் பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கடந்த 25ஆம் திகதி அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவிற்காக பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போது மக்களின் செயற்பாடுகள் குறித்து இராணுவத் தளபதி கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here