இலங்கையில் கட்டிலின்றி உயிரிழந்த கொரோனா நோயாளி..!

0

மாவனல்லை தள வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவரது சகோதரன் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டும் கட்டில் இல்லாததினால் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றிருக்கின்றது.

மாவனல்லை தள வைத்தியசாலையில் குறித்த நபர் 24ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற கட்டில் இருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை, கேகாலை தள வைத்தியசாலையிலும் கட்டில் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here