இலங்கையில் கடுமையாகும் சட்டம்! பொலிஸார் அறிவிப்பு

0

இலங்கை முகக்கவசம் அணியும் சட்டத்தை நாட்டில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

2020, அக்டோபர் 17ஆம் திகதி தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, பொது இடத்தில் முகக்கவசம் அணியாத நபர் தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம்.

அத்தகைய குற்றத்தை செய்யும் ஒருவரை பிடிஆணை உத்தரவு இல்லாமல் கைது செய்ய சட்ட ஏற்பாடுகள் உள்ளன.

இந்த சட்டத்தின் கீழ் முகக்கவசம் அணியாததாலும், சரியான முறையில் முகக்கவசங்களை அணியாததாலும் கடந்த அக்டோபரில் இருந்து 53,000 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

எனவே எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here