இலங்கையில் கடலுக்குச் சென்ற மூவர் மாயம்!

0

இலங்கையில் திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் இருந்து கடந்த 23ஆம் திகதி கடலுக்கு படகில் சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை.

திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் தங்கவேலாயுதம் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கடலுக்குச் சென்றவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த 21 வயதான இரண்டு பேரும், 34 வயதான ஒருவரும் என தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக கடற்படையினருக்கும், கடற்றொழில் திணைக்களத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here