இலங்கையில் ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

0

இலங்கையில் ஒரு நாள் சேவையின் கீழ் தினசரி வழங்கப்படும் ஓட்டுனர் உரிம அட்டைகளின் எண்ணிக்கையை 50 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

ஓட்டுனர் உரிமம் அச்சிடுவதற்குத் தேவையான அட்டைகளின் பற்றாக்குறையால், கடந்த காலங்களில் தற்காலிக சாரதி உரிமத் தாள்களாக உரிமங்கள் வழங்கப்பட்டன.

சுமார் 06 இலட்சம் தற்காலிக ஓட்டுனர் உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓட்டுனர் உரிமப் பத்திரங்களை வழங்குவதற்கு தேவையான அட்டைகள் தற்போது கிடைத்துள்ளது.

தற்காலிக பத்திரங்களுக்கு முன்னுரிமை வழங்கி அட்டைகள் விநியோகிக்கப்படும்.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here