இலங்கையில் ஒரே நாளில் 2500யை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

0

இலங்கையில் ஒரே நாளில் பாரிய அளவில் கொரோனா தொற்று இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி ஒரே நாளில் 2,639 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் ஒரே நாளில் 2000 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,25,893ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,19,853 ஆக காணப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஆயிரத்து 1365 பேர் குணமடைந்த நிலையில் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 4 ஆயிரத்து 463 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 19 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 18 ஆயிரத்து 811 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 786 ஆக உயர்வடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here