இலங்கையில் ஒரு நாளில் பதிவாகிய அதி கூடிய கொரோனா தொற்றாளர்கள்

0

இலங்கையில் நேற்று இதுவரை இல்லாதவாறு 1,111 கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதிகளவானோர் கொழும்பு, கம்பஹா, குருநாகல் மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியாக நேற்று பதிவான தொற்று நோயாளர் தொகை வருமாறு,

கொழும்பு – 200, கம்பஹா – 198, குருநாகல் -119, காலி -86, கண்டி -74, களுத்துறை -70, நுவரெலியா -55, பொலனறுவை -41, மாத்தறை -38, மொனராகலை -37 , மாத்தளை -32, திருகோணமலை -28, பதுள்ளை -20, அம்பாறை -17, இரத்தனபுரி, ஹம்பாந்தோட்டை -15, கேகாலை- 14, யாழ்ப்பாணம் -09, புத்தளம், மட்டக்களப்பு- 08, அனுராதபுரம் -07, வவுனியா -03, மன்னார் -01, முல்லைதீவு -01.

இதேவேளை, நேற்று 8 கொரோனா மரணங்களும் பதிவாயின. பொல்கொல்ல, ஹெட்டிபொல, மத்துகம, நுகேகொடை, பன்னிபிட்டிய, அம்பகஹ பெலஸ்ஸ, வத்தளை, ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதிகளைச் சேர்ந்த 62, 45, 53, 56, 76, 48, 73, 57 வயதுகளையுடைய 7 ஆண்கள், 1 பெண் ஆகியோரே உயிரிழந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here