ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்ட பெண் வெளிநாடு சென்று, மீண்டும் நாட்டுக்கு வந்தமை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டிருக்கவில்லை என்றாலும், அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை.
இதனால் குறித்த பெண் வெளிநாட்டுக்கு சென்றமை, மீண்டும் நாட்டுக்கு வருவதற்கு பயன்படுத்திய முறை தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாரவில பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய குறித்த பெண் கடந்த 24ஆம் திகதி நாட்டை வந்தடைந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.