இலங்கையில் ஒமிக்ரான் தொற்றுடைய 25 வயது யுவதி தொடர்பில் வெளியான தகவல்!

0

நாட்டில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான் தொற்றாளர், 25 வயது யுவதி என, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 24 ஆம் திகதி, நைஜீரியாவில் இருந்து இலங்கை வந்து, மாரவில பிரதேசத்தில் வசித்து வரும், இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவருக்கே, ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர், தற்போது அவரின் வசிப்பிட பிரதேசத்தில் உள்ளார்.

குறித்த யுவதி, தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பின்னர், சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்றிருந்தார்.

குறித்த காலப்பகுதியில், அவர் தனியான அறையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவ்விடத்தில் இருந்து, வைரஸ், வேறு நபர்களுக்கு பரவ வாய்ப்பில்லை என கூற முடியாது.
ஆனால், வாய்ப்புகள் மிக குறைவு.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் பயண விபரங்கள் மற்றும் அவரிடம் பழகியவர்கள் தொடர்பில் எமக்கு தெரியாது.

அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வந்த நபர்கள், இந்த வைரஸை கொண்டு வர வாய்ப்புள்ளது.

அவ்வாறான நபர்களையும், மிக விரைவில் கண்டுபிடிக்க கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here