இலங்கையில் ஒன்லைன் வகுப்பிற்கு செல்லாத மாணவனுக்கு தந்தையால் நேர்ந்த கதி

0

காலி பிரதேசத்தில் தும்புத்தடியால் தாக்கப்பட்டமையால் மயக்கமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் காலி பிரதான நீதிவான் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலி – மஹமோதர பகுதியில் 16 வயதான குறித்த சிறுவன் இந்த முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.

குறித்த மாணவன் சில மாதங்களாக ஒன்லைன் கற்கை நடவடிக்கைகளில் ஈடுபடாமையினால் தந்தை கண்டித்துள்ளார்.

கோபம் காரணமாக மகனின் முதுகின் மீது துடைப்பத்தால் அடிக்க அடிக்க தந்தை முயற்சித்த போது அதனை தவிர்க்க மகன் முயற்சித்துள்ளார். இதன் போது அந்த தாக்குதல் அவரது தலையில் விழுந்தமையினால் மகன் காயமடைந்துள்ளார்.

வீட்டில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பணித்துத் தந்தையால் நேற்று பிற்பகல் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது மயக்கமடைந்த சிறுவன் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here