ஒட்சிசன் தேவைப்பாடுடைய கொரோனா நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என மருத்துவ தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் ஒட்சிசன் தேவைப்பாடு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு என்பனவற்றில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 17 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. இவ்வாறு பதிவாகும் மரணங்களில் 60 வீதமான மரணங்கள் பூஸ்டர் மாத்திரை பெற்றுக்கொள்ளாதவர்கள் மத்தியில் இடம்பெறுகின்றது.