இலங்கையில் ஒட்சிசன் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

0

கொரோனா நோயாளர்கள் கூடுதலாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அபாய நிலை தொடர்பான எழுத்து மூல அறிவிப்பு கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அநேகமான பிரதான வைத்தியசாலைகளில் அபாய நிலையே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் வசதிகளுக்கு மேலதிகமாக கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், முன்னுரிமை தேவைக்கு அமைய அபாய நிலையைக் கருத்திற் கொண்டு நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் ஏனையவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்து மாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய கொரோனா நிலையைக் கருத்திற் கொள்ளாது, மாகாண எல்லைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here