இலங்கையில் ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களில் சிலப் பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, எலப்பாத்த, இரத்தினபுரி, கலவானை, குருவிட்ட, அயகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்டை, தெரணியகலை, வரக்காப்பொல, அரநாயக்க மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, பாலிந்தநுவர, அகலவத்தை, வலல்லாவிட்ட, மத்துகம, தொடாங்கொட புளத்சிங்கள மற்றும் காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் அவதானமான செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here