இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு குறித்து நாளை எடுக்கப்படவுள்ள இறுதி தீர்மானம்!

0

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்திடம் (International Monetary Fund) செல்வதா இல்லையா என்பது சம்பந்தமாக நாளை மறுதினம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது தொடர்பில் அரசாங்கத்திற்குள் இரண்டு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

டொலர் தட்டுப்பாட்டுக்கு உடனடியான தீர்வாக, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என்பது சிலரது நிலைப்பாடு. எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடினால், பல்வேறு நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும் என்பது மேலும் சிலரது நிலைப்பாடாக இருந்து வருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa)தலைமையில் நாளை மறுதினம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றி விரிவாக கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை சம்பந்தமாக அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரும் நாளை மறுதினம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பானது ஆயிரத்து 500 மில்லியன் டொலர்கள் வரை குறைந்துள்ளது. இதில் ஆயிரத்து 100 மில்லியன் மாத்திரமே அமெரிக்க டொலர்கள் என ராஜாங்க அமைச்சர் ஷொயன் சேமசிங்க (shehan Semasinghe)நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here