இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறுவது தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்…

0

நாட்டின் சில இடங்களில் அண்மையில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தமைக்கான காரணத்தை துறைசார் நிபுணர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் முன்னாள் ஆய்வுகூட பிரதானி சிறில் சுதுவெல்ல இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

யூடியூப் அலைவரிசையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எரிவாயு கலவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றமே இவ்வாறு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறுவதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு சிலிண்டர்களில் 20 வீதம் ப்ரோபேய்ன் மற்றும் 80 வீதம் பியூடென் ஆகியன உள்ளடங்கியிருக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், தற்பொழுது எரிவாயு சிலிண்டரில் பியூடென் மற்றும் ப்ரோபேன் என்பன 50, 50 வீதம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ப்ரோபெனின் அளவு எரிவாயு சிலிண்டர்களில் அதிகரிக்கப்பட்டமையே ஆங்காங்கே எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதற்கான காரணம் என சிறில் சுதுவெல்ல தெரிக்கின்றார்.

சுயாதீனமான அடிப்படையில் பரிசோதனை நடாத்த அனுமதியளிக்கப்பட்டால் நாட்டு மக்களுக்கு உண்மையை அம்பலப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறில் சுதுவெல்ல, சபுகஸ்கந்த, சவூதி அரேபியாவின் சமனோல், இத்தாலியின் லிவானொ ஆகிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களில் ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் அண்மைக்காலமாக எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், வாயு கலவையில் ஏற்பட்ட மாற்றங்களால் இச்சம்பவங்கள் இடம்பெறவில்லை என அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here