இலங்கையில் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு

0

நாடு முழுவதும் லாஃப் சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் எரிவாயு கிடையாது என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

கடந்த சில காலமாக எரிவாயு நிறுவனத்தினால் தமக்கு, சமையல் எரிவாயு விநியோகிக்கப்படவில்லை என எரிவாயு விநியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனாலேயே, சந்தையில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

சந்தையில் 70 வீத வாடிக்கையாளர்களை லிட்ரோ எரிவாயு நிறுவனமும், 30 வீத வாடிக்கையாளர்களை லாஃப் நிறுவனமும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here