இலங்கையில் எரிபொருள் வரிசையில் நிற்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இலங்கையில் கொட்டாவ எரிபொருள் வரிசையில் சிக்கி ஏமாற்றப்பட்டவர் இணையத்தில் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

கொட்டாவ எரிபொருள் வரிசையில் குறித்த நபரிடம் ஒருவர் பேசியுள்ளார்.

அதில் தங்களிடம் டீசல் உள்ளதெனவும் ஒரு லீட்டர் 300 ரூபாய் என்ற கணக்கில் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

டீசல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமையினால் 300 ரூபாய்க்கு வழங்குவதாக கூறியுள்ளார்.

நீண்ட வரிசை காணப்பட்டமையினால் குறித்த நபர் அதனை பெற்றுக் கொள்வதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்.

குறித்த நபரின் வாகனத்திலேயே ஹோமாகம பிரதேசத்தில் சந்தேக நபர் அழைத்து சென்றுள்ளார்.

செல்லும் வழியில் “இது தான் என் வீடு டீசலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அங்கு வாருங்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எவ்வளவு லீற்றர் டீசல் வேண்டும் என சந்தேக நபர் வினவியுள்ளார்.

தனக்கு 30 லீற்றர் தேவை என பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களிடம் 50 லீற்றர் உள்ளது.

அதனை 15ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு முழுமையாக பெற்றுக் கொள்ளுங்கள்.

டீசலின் உரிமையாளர் இராணுவத்தில் உள்ளார் அதனால் அவர் ஒன்றும் கூற மாட்டார் என சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியவுடன் சரி 10ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என கூறியுள்ளார்.

முதலில் டீசலை காண்பியுங்கள் தருகிறேன் என பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.

பின்பு 7ஆயிரம் ரூபாய் தாருங்கள் என கூறியுள்ளார்.

டீசலை காண்பிக்கவில்லை என்றால் வழங்க முடியாதென பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.

சரி நீங்கள் இந்த இடத்திலேயே இருங்கள் 5ஆயிரம் தாருங்கள் எடுத்து வருகிறேன் என சந்தேக நபர் கூறியதுடன் பலவந்தமான பணத்தையும் பெற்றுள்ளார்.

எனினும் அந்த நபர் அங்கிருந்து செல்வதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட நபர் புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டுள்ளார்.

பணத்துடன் சென்ற நபர் மீண்டும் திரும்பி வரவில்லை.

அவர் போதை பொருளுக்கு அடிமையானவர்.

இவ்வாறு பாரிய அளவிலான மக்களிடம் இதே போன்று பணம் கொள்ளையடித்துள்ளமை தெரிய வந்துள்ளது.

அவர் காண்பித்த வீடு அவருக்கு சொந்தமானதல்ல எனவும் தெரியவந்துள்ளது.

இதனால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here