இலங்கையின் தற்போதைய நிலையில் மின் கட்டணம், எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின்போது, அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனை அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல மணி நேரங்களாக அவற்றைப் பெறுவதற்கு மக்களும் வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருப்பதுவும் இதனால் உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.