இலங்கையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள 9 மாகாணசபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
தொடர்ந்தும் மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடத்துவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 340 உள்ளூராட்சி சபைகளில், 200 சபைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியது. அப்போது நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்து வந்தது.
இம்முறையும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற முடியும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.