இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடும் ஐரோப்பிய நாடு!

0

நோர்வேயின் வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.

நோர்வே அரசாங்கம் வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பல நோர்வே தூதரகங்களை வலுப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளதாக தூதரகம் குறிப்பிடுள்ளது.

இந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, 2023 ஜூலை இறுதிக்குள் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட வெளிநாடுகளில் உள்ள ஐந்து நோர்வே தூதரகங்களை நிரந்தரமாக மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் உள்ள தூதரகத்தை மூடும் முடிவு நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தூதரகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here