இலங்கையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு!

0

இலங்கையில் இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான 80% வருகையை கருத்தில் கொள்ள அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தை மேலும் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பை அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனத்தில் தொடர்வதற்காக 2017ஆம் ஆண்டு முதல் வட்டியில்லா கல்விக் கடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதேவேளை, 2019/2020 க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பிப்பதற்கான கால எல்லையை 19.08.2022 வரை நீடிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here