இலங்கையில் உயரும் கொரோனா பலி எண்ணிக்கை…! 3 மாத குழந்தையுடன் பலர் பலி!

0

இலங்கையில் நேற்று 10 ஆம் திகதி 26 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய கொவிட் மரண எண்ணிக்கை இதுவாகும்.

காலி, ஹெட்டிபொல, பல்லேவெல, கண்டி, மத்துகம, பாதுக்கை, மீகஹகொடை, அக்குரஸ்ஸ, மொரான்துடுவை, அநுராதபுரம், கொழும்பு-6, கலுஹக்கல, மொரட்டுவை, மல்வானை, கொழும்பு 15, பொரளை, கந்தானை, மாஸ்வெல, வத்தேகம, மாலபே ஆகிய பகுதிகளில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

அதேநேரம், யாழ்ப்பாணம், களுத்துறை மற்றும் நேபடை ஆகிய பிரதேசங்களில் தலா இரண்டு கொரோனா மரணங்களும் பதிவாகின

உயிரிழந்தவர்களில 14 ஆண்களும் 11 பெண்களும், 3 மாத குழந்தையொன்றும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here