இலங்கையில் உணவுப்பொருட்களை வாங்குவோர் குறித்து வெளியான தகவல்

0

உணவு பொருட்களுக்கான விலை அதிகரித்தமையை அடுத்து உணவுகளை வாங்குவோரின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

மின் துண்டிப்பும் இந்த விடயத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 600 கொள்கலன்கள் தொடர்ந்தும் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி, சீனி, மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுகளே இவ்வாறு தேங்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். பருப்பு மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here