இலங்கையில் உணவுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

0

இலங்கையில் தற்போதைய நிலைமை இப்படியே நீடித்தால் எதிர் காலத்தில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பெரும் போகத்தில் பயிரிடப்பட்ட நிலங்களில் மூன்றில் ஒரு பகுதியே மாத்திரமே பயிர்ச்செய்கைக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், உர நெருக்கடி தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது குருநாகல் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் மாத்திரமே நெல் மற்றும் ஏனைய பயிர் செய்கைகளுக்காக வெற்றிகரமாகத் தயார் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் புள்ளி விபரங்களுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.

தற்போதைய நிலைமை இப்படியே நீடித்தால் எதிர்காலத்தில் நாடு பாரிய உணவு தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடும் என பசில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here