இலங்கையில் உச்சத்தை நோக்கி நகரும் ஒமிக்ரோன் – வெளியான அதிர்ச்சித் தகவல்!

0
இலங்கையில் கொவிட் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.

இதன்படி, இலங்கையில் 160 புதிய ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

ஒமிக்ரோன் தொற்றாளர்களை அடையாளம் கண்டுக்கொள்வதற்காக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற 180 மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாகவே, இந்த 160 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த ஆய்வு தொடர்பிலான அறிக்கை, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் அடையாளம் காணப்படுகின்ற கொவிட் தொற்றாளர்களில் 12 முதல் 24 வீதமானோர் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்ஜித் பட்டுவத்துடுவ தெரிவிக்கின்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here