இலங்கையில் இளம் காதல் ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்.!

0

சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி முகநூல் காதல் ஜோடி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் மாத்தறை மாவட்டத்தின் கொலன்ன, பிட்டவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் கொலன்ன, பிட்டவெலவை சேர்ந்த ஹன்சிகா சந்தமல் (17) மற்றும் டிக்வெலவைச் சேர்ந்த சூரஜ் பிரசன்னா (26) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவது,குறித்த காதல் ஜோடி முகநூல் மூலம் அறிமுகமாகி பின்னர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலியை சந்திப்பதற்காக நேற்று இரவு அவரது வீட்டிற்கு இளைஞன் சென்றுள்ளார்.

இருவரும் வீட்டிற்கு வெளியே இருளில் நின்று பேசிக் கொண்டிருந்ததை சிலர் அவதானித்துள்ளனர். இதனை கண்ட காதல் ஜோடி தப்பியோட முயன்ற போது சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி உயிரிழந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here