இலங்கையில் இருவேறு பகுதிகளில் தலையில்லாத குழந்தைகளின் சடலங்கள் மீட்பு..

0

இலங்கையில் இருவேறு இடங்களான பண்டாரவளை மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளில் இருந்து தலையில்லாத இரண்டு குழந்தைகளில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

பண்டரவளை, எல்ல – கரண்டகொல்ல பகுதியில் இருந்து ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்ற குழந்தையின் உடல் முல்லேரியாவில் உள்ள கெலனி நதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தைகளின் உடல் பொலித்தீன் பையில் போடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குழந்தைகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here