இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 24 பேர் கைது

0

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி குரக்கன்ஹேன பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களுக்குள் சிறு பிள்ளைகள் இரண்டும் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here