இலங்கையில் இருதய நோயால் உயிரிழந்த 18 நாட்களேயான குழந்தைக்கு கொவிட்!

0

மினுவாங்கொடை பகுதியில் பிறந்து 18 நாட்களேயான குழந்தை ஒன்று இருதய நோயால் உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து, இந்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளையடுத்து குழந்தைக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த குழந்தையின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்திய கொவிட் திரிபான டெல்டா திரிபுடன் தெமட்டகொடை பகுதியில் 5 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here