இலங்கையில் இரண்டு நாட்களாகத் தொடர்ந்த தாதியர் போராட்டம்…

0

இலங்கையில் இரண்டு நாட்களாகத் தொடர்ந்த தாதியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நிறைவுகாண் வைத்திய சேவையாளர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமையே இதற்கான காரணமாகும்.

இதனால் ஆய்வுக்கூட பணிகள், மருந்தகங்கள் உள்ளிட்ட வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தாதியர்கள் முன்வைத்த 7 கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளுக்குத் தீர்வளிப்பதாக ஜனாதிபதி நேற்று உறுதியளித்திருந்தார்.

இரண்டு கோரிக்கைகளுக்கு அடுத்த பாதீட்டில் தீர்வளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த விடயத்தில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக நிறைவுகாண் வைத்திய சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று போராட்டத்தை நடத்தும் அதேநேரம், நாளையதினம் சுகவீனப் போராட்டத்தை முன்னெடுப்பதுடன், நாளை மறுதினம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here