இலங்கையில் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டோருக்கு முக்கிய தகவல்!

0

இலங்கையில் இரண்டு தடவைகள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னதாக கொவிட்-19 தொற்று உறுதியானவர்களுக்கும் மீள கொவிட்-19 தொற்று உறுதியாகக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 தொற்று உறுதியானவர்கள் குறிப்பிட்ட காலம் சென்றதன் பின்னர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது 224 மத்திய நிலையங்களில் 38,825 நோயாளர்களுக்கான படுக்கைகள் உள்ளன. அவற்றில் 31,788 படுக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதுதவிர தீவிர சிகிச்சை பிரிவில் 100 படுக்கைகள் உபயோகிக்கப்படுவதாகவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here