இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகம்!

0

கொவிட் தொற்றாளர்களை அவர்களின் நோய் நிலைமைக்கு ஏற்ப சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்புதல் அல்லது வீட்டினுள் வைத்து பராமரிப்பது தொடர்பாக புதிய வேலைத்திட்டத்தை கொவிட் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் ஆரம்பித்துள்ளது.

இன்று முதல் மேல் மாகாணத்தில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 1904 என்ற இலக்கத்திற்கு தனது நோய் நிலைமை குறித்து குறுந்தகவல் மூலம் தொற்றாளர் அறிவிக்க முடியும். அதன்படி அவர்களின் நோய் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்படவுள்ளது.

இந்த நடைமுறைக்கு அமைய சுவாசிப்பதற்கு கஸ்டமான நோயாளர்கள், காய்ச்சல் நிலையில் இருப்போர், எந்தவித நோய் அறிகுறியும் தென்படாதோர் என்ற அடிப்படையில் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும் என்பதுடன், தேவையானோர் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here