இலங்கையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய சுகாதார வழிகாட்டல்

0

நாட்டில் தற்போது அமுலில் உள்ள கொவிட் – 19 சுகாதார நடைமுறையை, மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்க சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

இதன்படி, இன்று (மார்ச் 01) முதல் எதிர்வரும் மார்ச் 31ம் திகதி வரை இந்த சுகாதார நடைமுறை அமுலில் இருக்கும் என சுகாதார அமைச்சு சுற்று நிரூபமொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

கொவிட் ரைவஸிடமிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக முகக் கவசத்தை அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட இதுவரை பின்பற்றி வந்த சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு சுகாதார பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது சமூக இடைவெளியை பேணுதல், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை அழைத்து செல்லுதல், பொது போக்குவரத்து சேவையில் முகக் கவசத்தை அணிதல் உள்ளிட்டவை கட்டாயமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 100 வீதம் பூரண தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் கூறுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here