இலங்கையில் இன்று முதல் தடை செய்யப்படும் பொருட்கள்

0

இலங்கையில் இன்று மார்ச் 31 ஆம் திகதிமுதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனை தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஒருமுறை மாத்திரம் பயன்படுத்திவிட்டு அகற்றப்படுகின்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல், மைக்ரோ இருபதுக்கும் குறைவான பொலித்தீன், பெட் போத்தல் , சம்போ பைக்கெட், கொட்டன் பட் மற்றும் காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருள்கள் என்பன தடைசெய்யப்படும்.

இந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் அதிகமானவை சூழலுடன் சேர்வதால் அதிகமாக சூழல் மாசடைவு ஏற்படுவதுடன், குடி தண்ணீர் மற்றும் நீர் மாசடைவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் சூழலுக்கு உகந்த பொருள்களை அறிமுகப்படுத்தவும் சுற்றுச் சூழல் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here