இலங்கையில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்…!

0

இலங்கையில் இன்று 6 ஆம் திகதி சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒருபகுதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊர்காவற்துறை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நாரந்தனை வடமேல் பகுதியான தம்படி பிரதேசமும்

மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகளும்

களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட காவல்துறை அதிகாரப்பிரிவின் பூஹபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் காவல்துறை அதிகாப்பிரிவுக்குட்பட்ட ஏறாவூர்- 2 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here