இலங்கையில் இன்று காலை இடம்பெற்ற விபத்து! அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

0

இரத்தினபுரி-கெடந்தொல பிரதேசத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த கனரக வாகனமொன்று (கன்டெய்னர்) வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலமொன்றை உடைத்துக்கொண்டு ஆற்றில் வீழ்ந்துள்ளது.

இது தொடர்பான காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, பாலத்திலிருந்து கனரக வாகனம் பள்ளத்தில் வீழ்வதற்கு முன்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றை மோதியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இன்று (13) காலை ஏற்பட்ட இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி இரத்தினபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், காரை மோதிவிட்டு கனரக வாகனம் பள்ளத்தில் வீழ்ந்ததைத் தொடர்ந்து காரில் இருந்த நபர் வெளியே வந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here