இலங்கையில் இனிமேல் 4 மணிநேரமே மின்வெட்டு!

0

ஏப்ரல் 02 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்ககூடியதாக இருக்கும்.” – என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“எதிர்வரும் 2ஆம் திகதி எமக்கு ஒருதொகை டீசல் வருகின்றது. அந்த டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. எனவே , 2ஆம் திகதிக்கு பிறகு தற்போதைய நிலைமை ஓரளவுக்கு சீராகும். மின்வெட்டை 4 மணிநேரம்வரை குறைக்கக்கூடியதாக இருக்கும். எரிபொருள் மற்றும் மழைவீழ்ச்சி கிடைத்தால் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியும்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here